மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில்களை மத்திய அரசு பெருமையாக கருதுகின்றது. கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் வந்தே பாரத் தொழில் சேவை பயன்பாட்டிற்கு வந்தது. தமிழகத்தில் முதலாவது வந்தே பாரத் ரயில் சென்னை மற்றும் மைசூர் இடையே தொடங்கப்பட்டது. இந்த ரயில் சேவை பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது வரை இருக்கை வசதி கொண்ட 25 வந்தே பாரத் ரயில்கள் தயாரித்து ரயில்வே துறைக்கு கொடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்தியாவில் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்யும் சாதாரண வந்தே பாரத் ரயிலை தயாரிக்க icf திட்டமிட்டுள்ளது. இதற்கு வந்தே பாரத் சாதாரன் அல்லது வந்தே அந்தியோதயா என்று பெயரிடப்பட உள்ளது. எட்டு பெட்டிகள் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்யவும் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், பன்னிரண்டாம் ரயிலின் இறுதியில் இரண்டு பக்கமும் எஞ்சினும் இருக்கக்கூடிய வகையில் டிசைனை உருவாக்க icf திட்டமிட்டுள்ளது.