
பிரம்மாண்ட பட்ஜெட்டில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் GOAT. வெங்கட் பிரபு இயக்கி வரும் இந்தப் படத்தில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கேப்டன் விஜயகாந்த் அவர்களை நடிக்க வைத்துள்ளனர். விஜயகாந்தின் மறைவிற்கு பின் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இப்படி ஒரு விஷயத்தை செய்துள்ளனர். விஜயகாந்த் மனைவி பிரேமலதாவிடம் முறையான அனுமதி பெற்று தான் AI தொழில்நுட்பம் மூலம் விஜயகாந்த் நடிக்கும் காட்சியை கொண்டு வந்துள்ளனர். இது தொடர்பான காட்சியை பிரேமலதா அவர்கள் பார்த்தாகவும், பார்த்து அசந்து போய்விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.