உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் பொதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி வாட்ஸ் அப் பயனர்களுக்கு தற்போது புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது வாட்ஸ் அப்பில் delete for everyone- க்கு பதில் delete for me கொடுத்து விட்டால் அதை உடனே Undo செய்து கொள்ளும் வகையில் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது மெட்டா நிறுவனம். இதன் மூலமாக இனி அடுத்தவர்களுக்கு செய்த மெசேஜ்களை அவசரப்பட்டு delete for me என்பதை கொடுத்து விட்டோம் என்றால் கவலைப்பட வேண்டாம். உடனே அதற்காக இந்த புதிய அப்டேட்டை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் whatsapp பயனர்கள் நிம்மதி தெரிவித்துள்ளனர்.