வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

ஆதார் என்பது தற்போது அனைத்து முக்கியமான பணிகளுக்கும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. அந்தவகையில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி முன்னதாக ஏப்ரல் 1, 2023 க்குள் இணைக்க காலக்கெடு நிர்ணயித்த மத்திய அரசு, காலக்கெடுவை மார்ச் 31, 2024 வரை நீட்டித்தது.

ஆகஸ்ட் 2022 முதல், தேர்தல் ஆணையம் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களிடமிருந்து ஆதார் அட்டை எண்களை சேகரித்து வருகிறது. ஆனால், அவற்றை இணைக்கும் பணி இன்னும் துவங்கவில்லை. இதற்கிடையில், ஜனவரி 1, 2023க்குள் நாட்டில் 95 கோடி பேர் வாக்காளர்களாகப் பதிவு செய்துள்ளனர்.