தமிழக முழுவதும் 99 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு புதிய வாகன பதிவு, பழைய வாகனங்கள் பெயர் மாற்றம், ஓட்டுனர் உரிம பெறுதல், புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றது. ஆண்டு ஒன்றுக்கு லட்சக்கணக்கானவர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் சேவைகளை  வழங்கி வருகிறது. இங்கு ஏராளமான வாகன ஓட்டிகள் சென்று லைசென்ஸ் வாங்கி வருகிறார்கள்.

இந்நிலையில் வாகன ஓட்டிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்  கிளை முக்கிய எச்சரிக்கை உத்தரவை  பிறப்பித்துள்ளது. லைசென்ஸ் இல்லாமல் பைக் ஓட்ட அனுமதிக்கக் கூடாது. உரிய வயதில் லைசென்ஸ் பெற்ற பிறகே இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதிக்க வேண்டும். லைசென்ஸ் இன்றி குழந்தைகள் பைக்கில் செல்ல பெற்றோர் அனுமதி வழங்கினால், சமூகத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.