வருமானவரி செலுத்துபவர்களுக்கு வருமான வரி தாக்கல் செய்வதற்கு ஜூலை 31 தான் கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தற்போது வரை 5.83 கோடி மக்கள் வருமானவரி தாக்கல் செய்துள்ள நிலையில் இன்னும் பல கோடி மக்கள் தாக்கல் செய்யாமலேயே இருப்பதாக மத்திய வருவாய் செயலாளர் சஞ்சய் மல்கோத்ரா பிடிஐ தெரிவித்துள்ளார்.

ஆனால் வருமானவரி தாக்கல் செய்வதற்கான இணையதள பக்கம் மிகவும் மெதுவாக இயங்கிக் கொண்டிருப்பதால் கண்டிப்பாக வருமான வரி தாக்கலுக்காக கால அவகாசம் நீட்டிக்கப்படும் என்று பொதுமக்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் வருமான வரி தாக்கலுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்படாது எனவும் உடனடியாக கடைசி நாள் வரைக்கும் காத்திருக்காமல் தாக்கல் செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.