கடந்த 2019 ஆம் வருடம் அக்டோபர் மாதம் ஆந்திர மாநிலத்தில் சில்லறை மதுபான வியாபாரத்தை அரசு கையகப்படுத்திய நிலையில் தற்போது பெரும்பாலான மதுபான கடைகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. அதனால் கடந்த நவம்பர் மாதம் அந்த மாநிலத்தில் உள்ள சில்லறை மதுபான விற்பனை நிலையங்களில் டிஜிட்டல் கட்டணத்தை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டது.

அந்த வகையில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கான வசதிகள் தற்போது அங்கு முக்கியமாக அமைந்துள்ள ஆயிரம் சில்லறை மதுபான கடைகளில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி எஸ்பிஐ வங்கியின் உதவியோடு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் மதுபான நுகர்வோர்கள் google pay, போன் பே மற்றும் QR குறியீட்டை ஸ்கேன் செய்து அதன் மூலமாக டிஜிட்டல் முறையில் பணத்தை செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.