இந்தியாவில் வரும் காலாண்டிலும் வட்டி விகிதத்தில் உயர்வு இருக்காது என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவுக்கு பிறகு வட்டி விகிதங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டதால் வங்கியில் லோன் வாங்கியவர்கள் மற்றும் புதிதாக லோன் வாங்குவோரின் பாடு திண்டாட்டம் ஆகியுள்ளது. இருந்தாலும் பணவீக்கம் குறைந்து வருவதால் இனி வரும் நாட்களில் வட்டி விகிதம் உயர்த்தப்பட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக முடிவு செய்ய ரிசர்வ் வங்கி கமிட்டி பிப்ரவரி 6ஆம் தேதி கூட உள்ள நிலையில் இது குறித்து அறிவிப்பு வெளியாக உள்ளது.