வீட்டுக்கடன் மாதிரியான floating interest கொண்டு வங்கிகளின் கடன் வாங்கியோருக்கு ரிசர்வ் வங்கி நல்ல செய்தியை கொடுத்துள்ளது. முன்னர் வட்டி விகிதம் மாறும்போதெல்லாம் EMI காலத்தை வங்கிகள் தானாக உயர்த்திவிடும். ஆனால் இனிமேல் அப்படி செய்ய முடியாது. EMI தொகையை உயர்த்துவதா?அல்லது  EMI காலத்தை உயர்த்துவதா? அல்லது வட்டியை மாற்றுவதா? என்ற முடிவை லோன் எடுத்தவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துவிட்டது. இதனால் லோன் வாங்கியவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.