சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நாளை மறுநாள் நடிகர் விஜய் தலைமையில் லியோ பட வெற்றி விழாவிற்கு போலீஸ் கட்டுப்பாடுகளுடன் அனுமதியளித்துள்ளது. விளையாட்டு அரங்கில் எவ்வளவு இருக்கைகள் உள்ளதோ, அதுவரைதான் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவர்; விழா நிகழ்ச்சிக்கு 200 முதல் 300 கார்கள் வரலாம். ஆனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால் பேருந்துக்கு அனுமதியில்லை என கட்டுப்பாடு விதித்துள்ளது.