தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2026-27ஆம் நிதியாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் (பட்ஜெட்), மாநிலத்தின் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்யவும், விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை முற்றிலும் குறைக்கவும் மிக முக்கிய தொலைநோக்குத் திட்டம் ஒன்றை நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்துள்ளார்.

​மாநிலத்தில் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த நிறுவன அமைப்புகள், சாலை வடிவமைப்பு மற்றும் பொறியியல், போக்குவரத்துச் சட்ட அமலாக்கம், அவசரகாலச் சிகிச்சை மற்றும் விழிப்புணர்வுக் கல்வி ஆகிய 5 முக்கியத் தூண்களை (5 Key Pillars) மையமாகக் கொண்டு புதிய ஒருங்கிணைந்த திட்டம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

​இத்திட்டத்தின் முக்கியப் பகுதியாக, விபத்தினால் பாதிக்கப்படுவோருக்கு உடனடி உதவிகளை வழங்கும் முதலமைச்சர் விபத்து நிவாரண நிதிக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆபத்தான சாலைப் பகுதிகளைச் சீரமைப்பது, நவீன சிக்னல்கள் மற்றும் விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொள்ளும் சாலைப் பாதுகாப்புப் பணிகளுக்கு ரூ.130 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

​இதன் மூலம் இத்திட்டத்திற்காக மொத்தம் ரூ.330 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாலைக் கட்டமைப்பை மாற்றி அமைப்பதுடன், அவசர காலச் சிகிச்சைகளை விரைவுபடுத்தி மக்களின் பொன்னான உயிர்களைக் காக்கும் நோக்கில் அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.