தமிழகத்தில் புயலால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பிரபலங்கள் பலரும் நிதி உதவி வழங்கி வரும் நிலையில் தமிழக அரசு 6000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து 6000 ரூபாய் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன் வழங்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் ரேஷன் அட்டை இல்லாதவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் வருமான வரி செலுத்துவோர் வெள்ள நிவாரணத் தொகை பெறுவதற்கு புதிய விண்ணப்ப படிவம் வெளியாகி உள்ளது. ரேஷன் கடைகளில் வழங்கப்படும் விண்ணப்பத்தை பெற்று பெயர், மொபைல் எண், ஆதார் எண், வீட்டு முகவரி, வங்கி கணக்கு, வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததால் உடைமைகளை பாதிக்கப்பட்டதா? உட்பட 10 கேள்விகளுக்கு நீங்கள் பதில் அளித்தால் அதை சரி பார்த்து நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.