நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறப்படுவதாக  இந்திய ரிசர்வ் வங்கி சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இதனால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுக்கள் வங்கி அமைப்பிற்கு திரும்ப வந்துள்ளது. புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில் 76 சதவீதம் திரும்ப வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.

இந்நிலையில்  ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. செப். 30ம் தேதிக்குள் வங்கிகளில் மாற்றிக்கொள்ள ஆர்பிஐ அறிவுறுத்தியது. இந்நிலையில், இந்த காலக்கெடு நீட்டிக்கப்படுமா என மக்களவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். காலக்கெடு நீட்டிக்க வாய்ப்பில்ல என மத்திய அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்தார்.