உலகின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமாக திகழ்ந்து கொண்டிருக்கும் பிஎஸ்என்எல் மற்றும் வோடபோன் ஐடியா, ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு பல ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அதன்படி 200 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் ரீசார்ஜ் திட்டங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். முதலில் ஏர்டெல் 199 ரூபாயில் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகிறது. அதில் கூடுதலாக 3ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 300 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. அதே சமயம் கூடுதலாக ஹலோ டியூன்ஸ் மற்றும் wynk music ஆகியவையும் இலவசமாக வழங்கப்படுகின்றது.

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 199 ரூபாயில் 23 நாட்கள் வேலிடியுடன் தினமும் 1.5 ஜிபி டேட்டா, வரம் பெற்ற குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி மற்றும் ஜியோ சினிமா உள்ளிட்டா வசதிகள் வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு 199 ரூபாயில் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தில் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், மொத்தமாக 60 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

வோடபோன் ஐடியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 199 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் 18 நாட்களுக்கு தினமும் ஒரு ஜிபி அதிவேக டேட்டா, 100 எஸ் எம் எஸ், Vi Movies மற்றும் TV Basic வசதி வழங்கப்படுகிறது.