தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதில் 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் யாருக்கும் ஏமாற்றம் அளிக்காத வகையில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

ஆயிரம் ரூபாய் தொடர்பாக எஸ் எம் எஸ் வரவில்லை என்றால் உடனே தன்னார்வலர்கள், ரேஷன் கடை ஊழியர்களிடம் புகார் தெரிவிக்கலாம். நடைமுறை சிக்கல்கள் எழுந்தால் உடனுக்குடன் தீர்வு காணப்படும். வங்கி கணக்கில் பணம் செலுத்துவதால் எந்த பணிச் சுமையும் இருக்காது. பெண்களுக்கு தனி ஏடிஎம் கார்டு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.