தமிழக அரசு மகளிர்க்கான ஆயிரம் உரிமை தொகை திட்டத்தை வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ளது தமிழக அரசு. யார் யார் இந்த திட்டத்தின் மூலமாக பயனடைவார்கள் என்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளையும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்டது.  இந்நிலையில் மகளிருக்கு மாதம் 1000 வழங்க இருக்கும் அரசின் திட்டத்தில் மோசடிகள் நடைபெறுவது கவனத்திற்கு வந்துள்ளது.

அரசின் தகுதிப் பட்டியலுக்குள் வராத பெண்களை குறிவைத்து மாதம் 1000 வாங்கித் தருவதாக தரகர்கள் மோசடி செய்ய ஆரம்பித்திருக்கின்றனர். இதற்காக பணமும் வாங்குவதாக தெரிகிறது. இந்த மாத இறுதியில் தொடங்கவிருக்கும் முகாம்களில் மட்டுமே விண்ணப்பம் செய்யுமாறும் பிறரிடம் ஏமாற வேண்டாம் என்றும் அரசு எச்சரித்துள்ளது