மிக நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணம் சவுகரியமாக இருப்பதால் பெரும்பாலான பயணிகள் அதையே தேர்வு செய்கிறார்கள். இந்த நிலையில் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரு சிலர் ரயில் டிக்கெட் ரத்து செய்யும் பட்சத்தில் எவ்வளவு தொகை ரீபண்ட் கிடைக்கும் என்று குறித்து பார்க்கலாம். அதாவது பயண நேரத்திற்கு 49 மணி நேரம் முதல் 12 மணி நேரத்திற்குள்ளாக ரயில் டிக்கெட் கேன்சல் செய்தால் மொத்த கட்டணத்தில் 25% மற்றும் குறைந்தபட்ச நிலையான பிளாட் ரேட் கழிக்கப்பட்டு மீதமுள்ள தொகை வழங்கப்படும்.

அதே நேரத்தில் ரயில் புறப்படுவதற்கு 12 மணி நேரத்திற்கு உள்ளே உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட் ரத்து செய்தால் 50 சதவீத பணம் திரும்ப கொடுக்கப்படும் .இதற்கு ஐஆர்சிடிசி இணையதளத்திற்கு சென்று TDR-ஐ ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். இந்த செயல்முறையை முடிக்காவிட்டால் கேன்சல் தொகை கிடைக்காது.