இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது இதில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். இந்த நிலையில் ரயிலில் பயணிக்கும் போது ஏற்படும் பிரச்சனைகளை பூர்த்தி செய்ய இந்திய ரயில்வே பல ஹெல்ப் லைன் எண்களை உருவாக்கியுள்ளது.

அதன்படி ரயில்வே தொடர்பான தகவல்களுக்கு 139 என்ற எண்ணை டயல் செய்து பயணிகள் பொதுவான தகவல், ரயில் அட்டவணை, நடைமேடை விவரம், PNR நிலை சரிபார்ப்பு ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.

ரயில் பயணிகளின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ள 182 என்ற ஹெல்ப்லைன் எண்ணுக்கு போன் செய்து சந்தேகத்திற்கு இடமான செயல்கள் குறித்த பயணிகள் புகார் அளிக்கலாம் .

ரயில்களில் பயணிக்கும் போது மருத்துவ உதவி தேவைப்பட்டால் 138 என்ற எண்ணை அழைக்கலாம்.

இந்திய ரயில்வே கின் மை கோச் என்ற சேவையை தொடங்கியுள்ள நிலையில் பயணிகள் தங்கள் பெட்டிகளுக்கு சுத்தம் செய்யும் சேவையை இதன் மூலம் பெறலாம். இந்த சேவையை பெறுவதற்கு உங்களுடைய பி என் ஆர் என்னை உள்ளிட்டு 58888 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம்.

பயணிகளின் புகார்களை கேட்கவும் கருத்துக்களை பெறுவதற்கும் 1800 111 139 என்ற எண்ணை அழைத்து புகார் தெரிவிக்கலாம்.

ரயில்வேயில் RPF போலீஸ ஹெல்ப்லைன் 152 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயணத்தின் போது பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்து கொள்ள முடியும்.

குழந்தைகள் சம்பந்தப்பட்ட அவசர நிலை புகார் அளிப்பதற்கு 1098 என்ற எண்ணை ரயில் பயணிகள் தொடர்பு கொள்ளலாம்.

பெண்கள் தங்களின் புகார்களை அளிக்க 181 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.