
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ரம்யா கிருஷ்ணன். இவர் படங்களில் அம்மா வேடம், குணச்சித்திர கதாபாத்திரம் என எந்த வேடமாக இருந்தாலும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார். இந்நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ரஜினியுடன் சேர்ந்து படையப்பா படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் அவர் வில்லி ரோலில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.
இந்நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஒரு பேட்டியில் முதலில் எதற்காக ரஜினியுடன் சேர்ந்து படையப்பா படத்தில் நடிக்கிறோம் என்று நினைத்து வருத்தப்பட்டதாக கூறியுள்ளார். அதாவது நெகட்டிவ் ரோல் என்பதால் முதலில் நடிக்க வேண்டுமா என்று அவர் யோசித்துள்ளார். இருப்பினும் அவர் நடிக்க சம்மதம் தெரிவித்த போதிலும் ஷூட்டிங் வரும்போது எல்லாம் விருப்பமில்லாமல் தான் சென்றுள்ளார். ஆனால் படம் ரிலீஸ் ஆன பிறகு மொத்தமும் மாறிவிட்டது என்று கூறியுள்ளார். மேலும் அந்தப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்ததால் ரம்யா கிருஷ்ணனுக்கும் அதிக அளவில் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது.