நாம் மொபைலின் நன்மைக்காகதான் கவர் வாங்குகிறோம் என நினைத்துக் கொண்டு இருக்கிறோம். எனினும் மொபைல் கவர் போடுவதன் மூலம் என்னென்ன பாதிப்புகள் வரும் என்பது குறித்து பலருக்கும் தெரியாது. மொபைல் கவர் போடுவதில் எவ்வளவு நன்மை உள்ளதோ அதே அளவு பல்வேறு பெரிய தீமைகளையும் கொண்டுள்ளது. தற்போது மொபைல் கவரை பயன்படுத்துவதால் என்னென்ன தீமைகள் வரும் என்பது குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.

அதன்படி மொபைல் கவரை பயன்படுத்திய பின் உங்களது மொபைல் விரைவாக வெப்பமடைகிறது. அப்படி மொபைல் வெப்பமடைவதால் அவ்வப்போது ஹேங்க் ஆகிவிடும். இதன் காரணமாக மொபைலை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படும். இதையடுத்து மொபைல் கவர் உள்ளதால் அது சூடுபிடிக்க தொடங்குகிறது. இதனால் மொபைல் போனை உங்களால் வேகமாக சார்ஜ் செய்ய இயலாது. உங்களின் மொபைல் கவர் காந்தத்தால் உருவாக்கப்பட்டது எனில் அது GPS மற்றும் திசைகாட்டி போன்றவற்றிலும் சிக்கல்களை ஏற்படுத்துகிறது.