சென்னையில் முதல் கட்ட மெட்ரோ பணிகள் கடந்த ஆண்டு முடிவடைந்து பயன்பாட்டுக்கு வந்த நிலையில் தற்போது மூன்று வழிதடங்களுக்கான இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இரண்டாம் கட்ட மெட்ரோ பாதை சுமார் 118.9 கிலோமீட்டர் தூரத்திற்கு பயன்பாட்டிற்கு வரவுள்ளது. தற்போது ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் தொடர்பான சோதனை பணிகள் நடைபெற்ற வரும் நிலையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள் பயன்பாட்டுக்கு வந்தவுடன் மெட்ரோ பயணிகள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் செல்போன் சார்ஜிங் வசதி கொண்டுவரப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வசதி தற்போது வரை அறிமுகப்படுத்தப்படாத நிலையில் 2027 ஆம் ஆண்டு முதல் இரண்டாம் கட்ட மெட்ரோ வழி பாதை செயல்பாட்டுக்கு வந்தவுடன் இந்த மொபைல் சார்ஜிங் வசதி அமலுக்கு வரும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த வசதி மூலமாக மெட்ரோ ரயில் பயணத்தின் போது தங்களின் மொபைலில் சார்ஜ் இல்லை என்று பயணிகள் இனி கவலைப்பட வேண்டாம்.