இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணங்களையே விரும்புவார்கள். ரயிலில் செல்வதற்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்து கொண்டால் பயணம் சுலபமாக இருக்கும். ஆனால் கடைசி நேரத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது சில பிரச்சனைகள் நேரிடும். இதன் காரணமாக ரயில்வே நிர்வாகம் முன்பதிவு இல்லாத பயண சீட்டுகளை பதிவு செய்ய புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியது. அதன்படி முன் பதிவு இல்லாத பயணச்சீட்டுகளை நீங்கள் மொபைல் மூலம் பதிவு செய்வதற்கு ப்ளே ஸ்டோரில் சென்று UTS APP என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு சீசன் டிக்கெட்டுகள் மற்றும் பிளாட்பார்ம் டிக்கெட்டுகள் போன்றவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நீங்கள் காகிதம் இல்லாத இல்லையெனில் காகிதத்தோடு கூடிய டிக்கெட் என எப்படி வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ‌ ரயில் நிலையத்திலிருந்து 15 முதல் 20 கிலோமீட்டர் தொலைவிற்குள் நீங்கள் வீட்டில் இருந்து கிளம்புவதற்கு முன்பாக செல்போனில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். நீங்கள் காகிதத்துடன் கூடிய டிக்கெட் முன்பதிவு செய்திருந்தால் ரயில்வே நிலையங்களில் உள்ள கவுண்டரில் காண்பித்து காகித டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம்.

இல்லையெனில் நீங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்த டிக்கெட்டை காண்பித்தால் மட்டும் போதுமானது. இந்நிலையில் ரயில்வே நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு அலுவலகங்களில் க்யூஆர் கோடு ஸ்கேன் ஒட்டப்பட்டு இருக்கும். இதை நீங்கள் ஸ்கேன் செய்து நீங்கள் போக வேண்டிய ரயில் நிலையத்தின் பெயரை பதிவு செய்து பணம் செலுத்தி முன்பதிவு இல்லாத டிக்கெட்டையும் பெற்றுக் கொள்ளலாம். மேலும் இதன் மூலம் பயணிகளின் ரயில் பயணம் சுலபமாகும் என்று கூறப்படுகிறது.