புயல் பாதிப்பு அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாநில அவசரகால செயல்பாட்டு மையம் 1070 மற்றும் வாட்ஸ் அப் எண் 94 45 86 98 48 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் புயல் பாதிப்பு குறித்து 1077 என்ற அவசர கால செயல்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

அதேபோல புயல் கால அவசர உதவிகளுக்கான கட்டணமில்லாத உதவி எண்களை அறிவித்தது புதுச்சேரி அரசு. புயல் உதவிக்கு 24 மணி நேரமும் இயங்கும் 1070, 1077 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி புயல் உதவி மின்துறை 1912, சுகாதாரத்துறை 108, 104 மற்றும் காவல்துறை 100, 112, 1931, 1073, 1091 ஆகிய எண்களும், தீயணைப்புத் துறையை 101, கடலோர காவல் படை 1554 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

இதையெல்லாம் தயாராக வைத்திருக்க வேண்டும் :

மிக்ஜாம் புயல் காரணமாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. புயல் காரணமாக பால், குடிநீர், உணவு, மருந்துகளை கையிருப்பு வைக்க பொது மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கயிறு, மெழுகுவர்த்தி, உலர் உணவு, மருந்து, குடிநீர், குளுக்கோஸ் தயாராக வைத்திருக்க வேண்டும்.

ஆஸ்பெஸ்ட்டாஸ் தகர ஷீட்டு காற்றில் பறக்கலாம் என்பதால் ஆபத்துள்ள பகுதிகளில் நிற்கக்கூடாது. அதிகாரப்பூர்வ தகவல்களுக்கு வானொலி, டிவியை கவனிக்க வேண்டும் என பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுரை வழங்கி உள்ளது.புயல் எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டதாக அறிவிப்பு வரும் வரை மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.