மத்திய அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் மூலம் வறுமை கோட்டுக்கு கீழ் வசிக்கும் பல கோடி குடும்பங்களுக்கு மத்திய அரசு இலவச சிலிண்டர் எரிவாயு மற்றும் அடுப்பை வழங்கியது. பயனர்களுக்கு வீட்டு உபயோக சிலிண்டருக்கான முன்வைப்பு பணம் 1600 ரூபாயை மத்திய அரசு எல்பிஜி நிறுவனங்களுக்கு செலுத்தும். மேலும் முதல் முறை சிலிண்டர் மற்றும் அடுப்பு இலவசமாக வழங்கப்படும்.

அதன் பிறகு ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மத்திய அரசின் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது உஜ்வாலா யோஜனா திட்டம் 2.0 தொடங்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இந்த திட்டத்தில் பதிவு செய்வதற்கு விண்ணப்பத்தாளர்கள் தேவையான ஆவணங்களுடன் அதிகார பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதன் மூலமாக உஜ்வாலா யோஜனா திட்டம் மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.