கோவா மாநிலத்தில் தலைமைச் செயலகத்தில் அனைத்து துறை தலைவர்கள் மற்றும் பல துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு கூட்டம் நடைபெற்ற நிலையில் அந்த கூட்டத்தில் மாநிலத்தில் தொழிற்பயிற்சி திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான விரிவான ஆய்வு செய்யப்பட்டது. தொழிற்பயிற்சி திட்டம் மற்றும் திறமையான பணியாளர்களை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தினார். மேலும் மாநிலம் முழுவதும் பல அரசு துறைகளில் 9 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணியிடங்களில் 2300 பணியிடங்கள் பயிற்சி திட்டத்தின் கீழ் நிரப்பப்பட உள்ளதாகவும் உள்துறையில் தற்போது 1850 பணியிடங்களும் பொதுத்துறையில் 966 பணியிடங்களும் காலியாக உள்ள நிலையில் இவை அனைத்தும் விரைவில் இறப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் இந்த அரசுத்துறை ஊழியர்களுக்கு 12 நாட்கள் சாதாரண விடுப்பு மற்றும் 15 நாட்கள் மருத்துவ விடுப்பு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.