மருத்துவப் பயிற்சியில் உள்ள முதுநிலை மருத்துவ மாணவிகள் மகப்பேறு விடுப்பில் செல்லும்போது அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்று தேசிய மருத்துவ ஆணையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முதுநிலை மருத்துவ மாணவிகள் மகப்பேறு விடுப்பு கால ஊக்கத்தொகை தொடர்பாக பல சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் எழுந்த நிலையில் அதற்கு விளக்கம் அளித்துள்ள தேசிய மருத்துவ ஆணையம், முதுநிலை மருத்துவ மாணவிகள் மகப்பேறு விடுப்பில் செல்வதற்கான நெறிமுறைகள் மாநில அரசை விதிகளுக்கு உட்பட்டவை.

அவர்கள் பணியில் இருக்கும் போது ஊக்கத்தொகை வழங்க வேண்டும் எனவும் அதே சமயம் மகப்பேறு விடுப்பில் செல்லும் போது அவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்க தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளது