மைக்ரோ பிளாஸ்டிக் மாசுபாட்டை ஏற்படுத்துவதில் வீடுகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் முக்கிய பங்கு வகிப்பதாக சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனை குளத்தை தாண்டி இந்த உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினங்களுக்கும் பாதிப்பு அதிக அளவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்ந்தால் மிக பாதிப்பை மனிதகுலம் சந்திக்க நேரிடும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மிகப் பெரிய அளவில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் மாசுபாடு பிரச்சினை தொடர்பாக உடனடி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் 4.88 முதல் 12.7 மில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கடலில் கலப்பதாக ஆய்வு தெரிவிக்கின்றன. 2050 ஆம் ஆண்டு வாக்கில் பெருங்கடல்களில் உள்ள பிளாஸ்டிக்கின் ஒட்டுமொத்த எடையானது மீன்களின் மொத்த உயிரி ஆற்றலை விஞ்சிவிடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.