சமீப நாட்களாக ஜப்பானில் யூடியூபர் ஒருவர் நாய் போன்ற உடை அணிந்து வலம் வந்த காணொளி சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இந்நிலையில் தற்போது ஜப்பானில் ஓநாய் தோற்றத்தில் ஒருவர் உலாவரும் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. டோருஉவேடா எனும் இளைஞருக்கு சிறு வயது முதலே ஓநாய்கள் மீது பற்று ஏற்பட்டுள்ளது. இன்ஜினியரான அவர் தானும் ஓநாயை போன்று மாற வேண்டும் என மிகுந்த ஆசை கொண்டுள்ளார்.

இதற்காக ஓநாய் போன்ற தோற்றம் கொண்ட ஆடை ஒன்றை வடிவமைத்து அந்த உடையில் அவர் உலாவும் காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. இந்த ஆடைக்கு அவர் செலவிட்ட தொகை இந்திய மதிப்பில் 20 லட்சம் ரூபாய் ஆகும். இதுகுறித்து டோருஉவேடா கூறுகையில் “மனித உறவுகளிலிருந்து நான் விடுபட்டு விட்டேன். பல பிரச்சினைகளை மறக்க இது உதவுகின்றது. இந்த ஆடையை அணிவதன் மூலம் பவர்ஃபுல்லாக உணர்கிறேன். கண்ணாடியில் என்னை பார்க்கும் போது ஒரு ஓநாயை பார்ப்பது போன்று உள்ளது” எனக் கூறியுள்ளார்.