நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறப்படுவதாக  இந்திய ரிசர்வ் வங்கி சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இதனால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுக்கள் வங்கி அமைப்பிற்கு திரும்ப வந்துள்ளது. புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில் 76 சதவீதம் திரும்ப வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. இந்நிலையில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்யலாம் அல்லது மாற்றிக் கொள்ளலாம். இதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஒருவேளை இன்னும் 2000 ரூபாய் நோட்டுகளை நீங்கள் வைத்திருந்தால் இந்த நோட்டுகளை வங்கியில் டெபாசிட் அல்லது மாற்றிக் கொள்ள இன்னும் ஒரு மாத காலம் மட்டுமே அவகாசம் உள்ளது. எனவே காலதாமதம் இல்லாமல் உடனே இந்த நோட்டுகளை மாற்றி  விடுவது நல்லது. ஒரு சிலர் கடைசி நேரத்தில் மாற்ற வேண்டும் என்று நினைப்பார்கள் .ஆனால் அந்த நேரத்தில் அதிக கூட்டம் போன்ற காரணங்களால் மாற்ற முடியாமல் போனால் சிரமத்தை சந்திக்க நேரிடும்.