நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள 14 அமுதம் பல்பொருள் அங்காடிகள், ரேஷன் கடைகளில் நாளை முதல் பருப்பு விற்பனை தொடங்குகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் தக்காளி கொள்முதல் விலைக்கு விற்பனை செய்யப்பட உள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த உணவுத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. து.பருப்பு அரை கிலோ ரூ.75, உ.பருப்பு அரை கிலோ ரூ.60 தக்காளி 1 கிலோ ரூ.60க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது.