தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்த சூழலில் மே மாதம் தொடக்கத்தில் கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. தற்போது அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை.

இந்நிலையில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரு சில இடங்களில் இயல்பிலிருந்து இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். தமிழக உட்பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது வெப்ப அழுத்தம் காரணமாக ஏற்படலாம் எனவும் எச்சரித்துள்ளது.