ஏழை எளிய மக்கள் தங்களுடைய அவசர காலத்தில் மருத்துவ சிகிச்சைகளை எந்தவித சிரமமும் இல்லாமல் மேற்கொள்ள மத்திய அரசு பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த  திட்டம் ஆயுஷ்மான் பாரத் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலமாக மக்கள் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ சிகிச்சைகளை முற்றிலுமாக பணம் இல்லாமல் தனியார் மருத்துவமனையிலோ அல்லது அரசு மருத்துவமையங்களிலும் பெற்றுக் கொள்ள முடியும்.

இதில் குடும்ப உறுப்பினர்களுடைய பெயர்கள் இனைக்கப்பட்டுள்ள நபர்கள் இந்த திட்டத்தின் மூலம் பணம் பெறலாம். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் பட்சத்தில் 15 நாட்கள் வரை செலவுகள் அனைத்துமே இந்த திட்டத்தில் வழங்கப்படும். இந்த ஆயுஷ்மான் கார்டு பெற pmjay.gov.in என்ற இணையதள முகவரியில் ஆயுஷ்மான் பாரத் அட்டைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதில் Create ABHA Card என்பதை கிளிக் செய்ய வேண்டும். ஆதார் எண்ணை உள்ளிட்டு உங்களின் OTP நம்பரை பதிவிட வேண்டும். விண்ணப்ப படிவத்தில் தேவையான விவரங்களை பதிவு செய்ய வேண்டும். ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை முறையாக பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பத்தை சமர்ப்பித்து ஆயுஷ்மான் பாரத் கார்டு ஒப்புதலை பெறலாம்.