தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தான், திமுக அரசு தகுதியான குடும்ப பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

அதுவும் 100 பெண்களின் 30 பேருக்கு மட்டும் தான் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கிறது. ஆனால் பாஜக வெற்றி பெற்றால் அனைத்து பெண்களுக்கும் இந்த உரிமை தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.