தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. அதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட நிலையில் சென்னையில் இன்று முதல் வீடு வீடாக டோக்கன் மற்றும் விண்ணப்பம் விநியோகிக்கும் பணி தொடங்குகிறது. இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்தும் துறையாக சிறப்பு திட்ட செயலாளருக்கு துறை உள்ளது. மத்திய அரசின் ஆதார் சட்டப்பிரிவு ஏழின் படி இலக்கு நோக்கிய நிதி மற்றும் இதர மானிய திட்டங்களுக்கு ஆதாரமாக ஆதார் எண் உள்ளது. அதனால் மகளிர் உரிமைத்தொகை திட்டம் போன்ற விதி சார்ந்த திட்டங்களுக்கு சான்று ஆவணமாக ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்.

ஆதார் எண் இல்லாத பட்சத்தில் ஆதார் எண்ணுக்கு பதிலாக விண்ணப்பம் செய்ததற்கான உரிய எண் குறிப்பிட வேண்டும். இதுவரை ஆதாரம் என்னை பெறாத விண்ணப்பதாரர்கள், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பினால் அவர்கள் ஆதார் எண்ணை பெற விண்ணப்பம் செய்ய வேண்டும். இதற்காக ஆதார் பதிவு மையம் அல்லது நிரந்தர மையங்களை விண்ணப்பத்தாளர்கள் அனுகி தனித்துவமான அடையாள எண்ணுக்கான இணையதளத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம். மேலும் ஆதார் பெறுவதற்கு உரிய ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர்கள் செய்து தர வேண்டும் எனவும் ஆதார் எண்ணை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விளம்பரங்களை ஆட்சியர்கள் செய்திட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.