தமிழகத்தின் தற்போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா அவர்களின் பிறந்த நாளில் தொடங்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் தற்போது தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில் முதல் கட்டமாக விண்ணப்ப விநியோக பணிகள் முடிவடைந்து நேற்று முதல் இரண்டாம் கட்ட விண்ணப்ப விநியோக பணிகள் தொடங்கியுள்ளது.

மக்கள் முகாம்கள் மூலமாக உரிமை தொகை பெற விண்ணப்பித்து வருகின்றனர். இந்த திட்டத்தின் கீழ் சுமார் ஒரு கோடி பேர் பயன் பெறுவார்கள் என அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மகளின் உரிமை தொகை திட்டம் தொடர்பாக தவறான தகவல்கள் மக்கள் மத்தியில் பரவி வருவதால் இது குறித்து பேசிய தமிழக டிஜிபி, மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்புவோரும் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்