தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காக இரண்டு கட்டங்களாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்று வரும் நிலையில் இரண்டாம் கட்ட முகாம் ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் விண்ணப்பங்களை தற்போது வரை பூர்த்தி செய்யாமல் இருக்கும் குடும்ப தலைவிகளுக்காக ஆகஸ்ட் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

எனவே விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய தவறிய குடும்பத் தலைவிகள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை காண விண்ணப்பம் தமிழக அரசு சார்பாக நிராகரிக்கப்படும் நிலையில் மேல் முறையீடு செய்யவும் குடும்ப தலைவிகளுக்கு உரிமை உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.