தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது எச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். மமிதா பைஜும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரிக்கும் நிலையில் இன்று குடியரசு தின விழாவை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.

நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படம் இது. இதன் காரணமாக படத்தின் மீது எதிர்பார்ப்பு என்பது அதிகரித்துள்ளது. மேலும் நடிகர் விஜய் அரசியலில் முழுமையாக ஈடுபட இருப்பதால் இந்த படத்தோடு முழுமையாக திரையுலகிலிருந்து விலக இருக்கிறார். இந்நிலையில் படக்குழு அறிவித்தது போன்று  தற்போது தளபதி 69 படத்தின் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாகியுள்ளது.அதன்படி இந்த படத்திற்கு, ஜனநாயகன் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.