ரேஷன் கடையில் வழங்கப்படும் பொருட்களை மக்கள் வாங்காமல் இருந்து வருவதால், கடைகளில் தேங்கி நிற்கிறது. இதை பயன்படுத்தி ஊழியர்கள் சிலர் கள்ளச்சந்தையில் விற்றுவிடுகின்றனர். இந்நிலையில் ரேஷன் பொருட்களை தேங்க விடாமல் திருப்பி அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி ரேஷன் கடைகளில் ஏற்படும் இதுமாதிரியான முறைகேடுகளை தடுப்பதற்காகவே, TNPDS எனும் மொபைல் ஆப்-ஐ உணவு வழங்கல் துறை அறிமுகம் செய்துள்ளனர். இந்த ஆப் மூலம் தங்கள் பகுதில் உள்ள ரேஷன் உணவுப் பொருள் இருப்பு, முந்தைய பரிவர்த்தனைகள் உள்ளிட்ட விவரங்களை, மக்கள் தெரிந்து கொள்ளலாம்.