பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில் இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை வங்கி தொடர்பான அனைத்து தகவல்களையும் ரிசர்வ் வங்கி தான் வழங்கி வருகிறது. மேலும் வங்கிகளுக்கு எந்தெந்த நாட்கள் விடுமுறை என்பது குறித்து அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கு மொத்தம் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்கள் அனைத்தையும் சேர்த்து பிப்ரவரி மாதத்தில் மட்டும் 11 நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்தது. தற்போது இந்த மாதத்தில் மீதம் உள்ள மூன்று விடுமுறை நாட்களை பார்க்கலாம். அதன்படி, பிப்ரவரி 24, 2024: நான்காவது சனிக்கிழமை, பிப்ரவரி 25, 2024: ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 26, 2024: நியோகம் காரணமாக அருணாச்சல பிரதேசத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை