
ரிஷப் ஷெட்டியின் காந்தாரா 1 திரைப்பட நடிகர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவை சேர்ந்த ஜூனியர் ஆர்டிஸ்ட்டான கபில் என்பவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். உடுப்பி மாவட்டத்தின் கொல்லூர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஷூட்டிங் முடிந்த பிறகு கொல்லூரில் உள்ள சௌபர்ணிகா ஆற்றில் குளித்து சென்ற கபில் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதனால் படக்குழுவினர் சோகத்தில் உள்ளனர். அவரது இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.