சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டனாக வருவதற்கான அனைத்து தகுதிகளும் இந்த இளம் வீரருக்கு உள்ளது என சென்னை அணியின் முன்னாள் வீரர் கேதர் ஜாதவ் தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 4 பட்டங்களை வென்று கொடுத்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, 2023 ஐபிஎல் உடன் ஓய்வு பெறவுள்ளதால், அதன் பிறகு சென்னை அணியை வழிநடத்த சரியான நபரை சென்னை அணி தேடுகிறது. கடந்த 2022 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜடேஜாவை கேப்டனாக நியமித்ததால் அவர் சென்னை அணியின் கேப்டனாக இருக்க மாட்டார் என்பது தெரிந்தது. இதனால் சென்னை அணி அடுத்த கேப்டனாக இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டை அறிவிக்கும் என அனைவரும் தெரிவித்தனர்.

ஆனால் 2023 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸை 16.25 கோடிக்கு சென்னை அணி ஒப்பந்தம் செய்துள்ளதால், தற்போது தோனியின் ஓய்வுக்குப் பிறகு சென்னை அணியின் கேப்டன் யார் என்பது அனைவரிடமும் எழுந்துள்ளது. ஐபிஎல் ஏலத்திற்கு முன்பு சென்னை அணியின் அடுத்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் என்று சொல்லிக்கொண்டிருந்த வாய்களெல்லாம் இப்போது சென்னை அணியின் அடுத்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ்தான் என்று கூறிவருகின்றனர்.

இதனிடையே ஐபிஎல் தொடர் குறித்தும், சென்னை அணி குறித்தும் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வரும் சென்னை அணியின் முன்னாள் வீரர் கேதர் ஜாதவ், பென்னை விட சென்னை அணியின் அடுத்த கேப்டனாக வருவதற்கான அனைத்து தகுதிகளும் ருத்ராஜ் கெய்க்வாட்டிருக்கு இருப்பதாக செய்தியாளர் சந்திப்பின் மூலம் தெரிவித்துள்ளார்.

சென்னை கேப்டன் தோனியின் ஓய்வுக்குப் பிறகு சென்னை அணியை வழிநடத்தும் அனைத்து தகுதிகளும் ருத்ராஜ் கெய்க்வாட்டிடம் இருப்பதாக கேதர் ஜாதவ் தெரிவித்துள்ளார். சென்னை அணிக்கு ஸ்டோக்ஸ் மற்றும் ஜடேஜா கேப்டனாக இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் இதில் பென் ஸ்டோக்ஸ் இந்த ஆண்டு சிறப்பாக விளையாட வேண்டும், தற்போது அவர் அணியில் இடம் பெறுவது சந்தேகமாக உள்ளது. இதனால், தோனியின் ஓய்வுக்குப் பிறகு சென்னை அணியை வழிநடத்த ருதுராஜ் கெய்க்வாட் சிறந்த தேர்வாக இருக்கிறார்’’ என்றார் கேதர் ஜாதவ்.

இதையடுத்து இந்திய அணியில் ருத்ராஜ் கெய்க்வாட் இடம் பிடித்தது குறித்து கேதர் ஜாதவ் பேசுகையில், “உலக கோப்பை தொடரில் வாய்ப்பு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு சிறந்த பேட்ஸ்மேன், அதன் பிறகு அவருக்கு இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும். டி20 தொடர், ரஞ்சி கோப்பை என அனைத்திலும் சிறப்பாக ஆடி வருகிறார். இளம் வீரராக அவர் நிச்சயம் சிறப்பாக செயல்படுகிறார்” என்று கேதர் ஜாதவ் கூறினார்..