பென்ஷன் வாங்கும் அனைவருக்கும் தாங்கள் உயிரோடு இருக்கிறோமா என்பதை தெரிவிப்பதற்கு தொடர்ந்து பென்ஷன் வாங்குவதற்கும் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிப்பது அவசியம்.  ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பித்து வருகிறார்கள். அக்டோபர் நவம்பர் மாதங்களில் இந்த சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும். ஆதார் எண், செல்போன் பெயர் மற்றும் ஓய்வூதியம் செலுத்தும் பேமெண்ட் ஆர்டர் நம்பர் மூலம் மட்டுமே ஆதார் அடிப்படையில் அங்கீகாரத்தின் உதவியுடன் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும்.

ஆனால் பல நேரங்களில் பென்ஷன் பேமென்ட் ஆர்டர் நம்பரை மறந்து விடுகிறார்கள். இதனால் ஓய்வுதியதரர்கள்  வாழ்வாதார சான்றிதழை சமர்ப்பிப்பது வரை சில சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே ஓய்வூதியதாரர்கள் ஒரு தனித்துவமான 12 இலக்க எண்ணை வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் பெறுகிறார்கள்,. பல நேரங்களில் பென்ஷன் வாங்குவோர் இந்த எண்ணை மறந்து விடுகிறார்கள்..

இந்த PPO எண்ணை பெறுவதற்கு முதலில் www.epfindia.gov.in என்ற இணையதளத்தில் செல்லவும். ஆன்லைன் சேவைக்குச் சென்று pensioner portal என்பதை கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு, இங்கே உள்ள PPO எண்ணைக் கிளிக் செய்யவும். பிபிஓ எண்ணை அறிய உங்கள் வங்கி கணக்கு எண் அல்லது பிஎஃப் எண்ணை உள்ளிட வேண்டும்.