அமெரிக்க நாட்டில் ஃப்ளோரிடா மாகாணத்தில் நஷாலி அல்மா என்ற பிட்னஸ் மாடல் வசித்து வருகிறார். இவர் சமூக ஊடகங்களில் உடற்பயிற்சி வீடியோக்களை பதிவிடுவதன் மூலம் பிரபலமாகியுள்ளார். இவர் கடந்த 22 ஆம் தேதி அன்று ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது சோவியர் தாமஸ் ஜோன்ஸ் என்பவர் நஷாலியை தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் நஷாலி எந்தவித பதட்டமும் இல்லாமல் தாக்குதல் நடத்தியவரிடம் தைரியமாக தன்னை தற்காத்துக்கொள்ள முயற்சித்தார். மேலும் நஷாலியை ஜோன்ஸ் தவறான முறையில் கட்டி அணைக்கவும் முயற்சித்தார்.

ஆனால் நஷாலி தொடர்ந்து போராடி சண்டையிட்டு இறுதியில் ஜோன்சை ஓடும் படி செய்து விட்டார். இது தொடர்பான வீடியோவை ஹில்ஸ்பரோ கவுண்டி ஷெரிப் அலுவலகம் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளது. இதில் நஷாலி அல்மா கூறியதாவது “என்னை நெருங்கி வந்த உடனே நான் அவனை தள்ளினேன். ப்ரோ என்ன இப்படி செய்கிறாய்? என கேட்டேன். என்னிடமிருந்து விலகிச் செல்லுங்கள். என்னை தொட முயற்சிக்காதீர்கள் என்று கூறினேன். எனது அறிவுரை என்னவென்றால் “பெண்கள் ஒருபோதும் தைரியத்தை கைவிடக்கூடாது” என எனது பெற்றோர்கள் கூறியது சண்டையிடும் போது என் மனதில் இருந்தது” என்று அவர் கூறினார்.