நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நம் பூமியின் மேற்பரப்புக்கு அடியில் மறைந்துள்ள ஒரு பரந்த நீர் தேக்கத்தை கண்டுபிடித்துள்ளனர். பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாரிய கடல் பரப்பொன்று விஞ்ஞானிகளால் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. நீரின் தோற்றத்தை விஞ்ஞானிகள் ஆராயும்போது கடல் மட்டத்தைப் போல நீர் தேக்கத்தை கண்டறிந்துள்ளனர்.

இந்த நீர்ப்பரப்பு நிலத்தின் மேல் காணப்படும் கடல் மட்டத்தை விட மூன்று மடங்கு பெரியது. இது பூமியின் நீர் பூமியில் உள்ளே இருந்து வந்தது என்று கூறப்படுகிறது. இந்த நீர்மட்டம் ரிங்வுடைட் எனப்படும் கனிமத்தில் மறைந்திருக்கும் கடல் என்றும் கூறப்படுகின்றது. வால் மீன் தாக்கங்களில் இருந்து நீர் தோன்றியதாக சிலரால் கூறப்படுகின்றது.