பாஜக ஒரு மிஸ்டு கால் கட்சி என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனம் செய்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் ஆனது வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கிழக்கு சட்டமன்றத்திற்கு உட்பட்ட 32 வது வார்டு பகுதியில் திமுக அமைச்சர்கள், காங்கிரஸ் வேட்பாளர் இவிகேஎஸ் இளங்கோனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகின்றனர். அதன்படி அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,பூத் கமிட்டிக்கு கூட ஆள் இல்லாத கட்சி பாஜக. பாஜக ஒரு மிஸ்ட்டு கால் கட்சி. அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். அவர்களை மையப்படுத்தி தான் இந்த இடைத் தேர்தல் நடப்பதைப் போல ஒரு மாயத் தோற்றம் உருவாக்கப்படுகிறது. ஈரோடு தொகுதி திமுகவின் கோட்டை. பொறுத்திருந்து பாருங்கள் என்று தெரிவித்தார்