பிரபல இயக்குனர் அஜய் ஞானமுத்து இமைக்கா நொடிகள், டிமான்டி காலனி மற்றும் கோப்ரா ஆகிய திரைப்படங்களை இயக்கியவர். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த டிமான்டி காலனி 2 திரைப்படம் நல்ல வரவேற்பை பற்றி வசூல் சாதனை புரிந்தது. தற்போது இவர் டிமான்டி காலனி 3 திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இயக்குனர் அஜய் ஞானமுத்து தற்போது தன்னுடைய நீண்ட நாள் காதலியை கரம் பிடித்துள்ளார். அவருடைய திருமண விழாவில் பிரபல நடிகர் விக்ரம், ஹிப் ஹாப் ஆதி தமிழா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாதி வரும் நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் என்பது குவிந்து வருகிறது.