ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன் பிறகு அதிமுக சார்பில் எடப்பாடி தரப்பு வேட்பாளரான கேஎஸ் தென்னரசு ஈரோடு கிழக்கில் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி மற்றும் தேமுதிக போன்ற கட்சிகளும் தேர்தலில் போட்டியிடும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக திமுக கட்சியில் உள்ள அனைத்து அமைச்சர்களும் ஈரோடு கிழக்கில் பிரச்சாரம் செய்து வருவதாகவும் அவர்கள் அரசு பணிகள் செய்யவில்லை எனவும் பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு தற்போது காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, மாவட்ட செயலாளர்கள் என்ற முறையில் திமுக அமைச்சர்கள் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். பிரதமர் மோடி எப்படி பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறாரோ அதேபோன்று தான் தற்போது திமுக கட்சியின் அமைச்சர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.