அபுதாபியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள PM மோடிக்கு UAE அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் சிறப்பு சைவ உணவு வகைகளை தயாரித்துள்ளார். இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளால் செய்யப்பட்ட ஹரிஸ், பேரீச்சை சாலட், உள்ளூரில் விளைந்த பயிறு வகைகளுடன் காலிஃபிளவர் மற்றும் கேரட் தந்தூரி ஆகியவை மெனுவில் உள்ளன. இதனைத்தொடர்ந்து ஸ்ர்-அல்-வதன் ஜனாதிபதி மாளிகையில் அதிபர் முகமது பின் சையத் அல் நஹ்யான், மோடிக்கு விருந்து அளித்தார்.

இந்த விருந்தில் முதலில், கோதுமை, பேரீச்சம்பழ சாலட் உடன் காய்கறிகளை தொடர்ந்து, மசாலா சாஸில் வறுக்கப்பட்ட காய்கறிகள் பறிமாறப்பட்டது. கறுப்புப் பருப்பும், காலிஃபிளவர், கேரட் தந்தூரி ஆகியவையும் வழங்கப்பட்டன. பிரதமரின் இந்த பயணத்தில் இரு நாடுகளிடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தெரிகிறது.