நாடு முழுவதும் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தில் தொடர்ந்து தவணை தொகையை பெறுவதற்கு விவசாயிகள் ஆதார் எண்ணுடன் வங்கி கணக்கையும், ஆதாருடன் மொபைல் எண்ணையும், நேரடி பண பரிவர்த்தனை மற்றும் நில ஆவணங்களை இணைத்தல் போன்ற பணிகளை கட்டாயம் செய்ய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வங்கி கணக்கை ஆதார் உடன் இணைக்க முடியாமல் இருந்தால் விவசாயிகள் நேரடி பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது எனவும் அவர்கள் கிராம தபால் நிலையத்தில் வழங்கப்பட்டுள்ள செல்போன் மற்றும் பயோமெட்ரிக் கருவி மூலமாக ஆதரவுடன் செல்போன் எண் பதிவு செய்து 0 இருப்பு கணக்கை தொடங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வருகின்ற ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் கட்டாயம் முடித்தால் மட்டுமே இந்த திட்டத்தில் பணம் விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.