பொதுவாக பழைய வாகனத்தை நாம் வாங்கும் பொழுது கட்டாயமாக ஓனர்கள் ஆர்சி புக் பெயர் மாற்றத்தை செய்ய வேண்டும். ஆனால் தமிழகத்தில் பலரும் பழைய காரை வாங்கி பழைய ஓனரின் பெயரிலேயே காரை ஓட்டி வருவதாக காவல்துறையில் குற்றம் சாட்டியுள்ளனர். இப்படி பழைய காரை வாங்கும்பொழுது அதற்கு என்ஒசி சான்றிதழ் வாங்கி அதன்பிறகு உடனடியாக வாகனத்தின் பெயரில் மாற்றம் செய்ய வேண்டும். மேலும் புதிதாக பழைய வாகனத்தை வாங்கும் போது வாகனத்தின் மீது ஏதேனும் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறதா? என்பதை சரிபார்த்த பிறகு பழைய காரை வாங்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்சூர ன்ஸ் புதுப்பிக்கப்பட்டுள்ளதா?  எத்தனை வருடத்திற்கு இன்சூரன்ஸ் போடப்பட்டுள்ளது எனவும் தெரிந்து கொள்ள வேண்டும். இன்னும் எவ்வளவு வருடத்தில் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் என்ற விவரத்தையும் புதிய ஓனர் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். இவ்வாறு பழைய கார் வாங்கி ஆர்சி புக்கில் பெயர் மாற்றம் செய்யப்படாமல் காரை ஓட்டிக் கொண்டிருந்தால் காவல்துறையின் சார்பாக 1500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.